மீனம், மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம் என ஏதாவது ஒரு பிறப்பு ராசியில் இருந்தால் சுக்கிரன் அதிகாரம் அடைந்துள்ளது என்று பொருள்.

Advertisment

சுக்கிரன் அதிகாரம் அடைந்ததற்கான நற்பலன்கள்!

தாத்தா பாட்டிகளுக்கு தீர்க்க ஆயுள் உண்டு.  முன்பே பழகியவருடன் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் ஏற்படும். தன்னைப் பொ-வாக காட்டிக்கொள்ள விரும்புவர். பணப்பழக்கம் அதிகம் உண்டு. பெண்கள் இவரிடம் பிரியமாக பழகுவர். திருமணத்திற்குப் பிறகு மேன்மை உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைப்பார்கள்.

Advertisment

சுக்கிரன் அதிகாரம் அடைந்ததற் கான சிக்கலான பலன்களும் உண்டு.

ஜாதகர் ஆண் எனில் திருமணம் தாமதமாகும். வயது 28--ருந்து 34 வயதுக்குள் குழப்பமான, அவசரமான திருமணம் நடக்கும் அல்லது திருமண வாழ்க்கை மிகுந்த சிரமம் மிகுந்ததாகவும் சச்சரவானதாகவும் இருக்கும். 

ஜாதகர்  வட்டி போன்ற வகையில் வருமானம் தீட்ட ஆசைப்பட்டு பிறகு அதில் சிக்கலை உண்டாக்கிக் கொண்டு தேவையில்லாத இழப்புக்கு ஆளாவார். அவ்வாறு பணம் கொடுக்கல் வாங்க-ல் சிக்கல் உண்டானால் பண விஷயமாக ஏதாவது ஒரு பதிலை பொய்யாகவாது சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு கடத்தும் குணமுடையவர். சுக்கிரனின் பிரதான தன்மைகள்ஜாதகருக்கு காதல், வசீகரம், கலை, நடிப்பு, கவர்ச்சி, உல்லாசம், பாலுணர்வு, சிற்றின்ப ஈடுபாடு, பட்டப்பெயர் மீது ஆர்வம், இளமையாக தன்னை வெüப்படுத்துதல், பேச்சாற்றல், சுய விளம்பரம், வீண் ஜம்பம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.

Advertisment

-ஜோதிடர் பா. உஷா தேவி